இலங்கை கடற்படையால் 17 காரைக்கால் மீனவர்கள் கைது: புதுச்சேரி முதல்வர் வெளியுறவுத் துறைக்கு கடிதம்

085.jpg

புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமனின் விசைப்படகில், சல்மேட்டை ராஜேஷ், ஸ்ரீராம், திருப்பட்டினம் தமிழரசன், நாகமுத்து, முருகரசன் ஞானவேல் உள்ளிட்ட மீனவர்கள் உட்பட 17 பேர், கடந்த 9-ஆம் தேதி கோடியக்கரை தென்கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து வந்தனர்.

அப்போது, இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு கடல்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 17 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் முதல்வர் ரங்கசாமியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர் . இதற்காக, முதல்வர் ந. ரங்கசாமி அவர்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி, 17 மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Summary:
Puducherry CM N. Rangasamy has written to the Union Foreign Minister requesting urgent action to release 17 Tamil Nadu fishermen from Karaikal, arrested by the Sri Lanka Navy in Mullaitivu waters while fishing. Families seek immediate intervention, and the CM emphasized recovering both the fishermen and their boat.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *