உடல் எடையை குறைக்கும் 30 அற்புதமான உணவுகள் – தினமும் ஒரு புதிய ரெஸிபி:

Add-a-subheading.png

இன்றைய தலைமுறையில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு ஒரு பெரிய சிக்கலாக மாறிவிட்டது. ஜிம் போவது, டயட் பண்ணுவது, Fasting எதை செய்து பார்த்தாலும் சில நேரங்களில் பயன் தெரியாது. ஆனால் நம்முடைய உணவில் சிறிய மாற்றம் செய்தால் போதும்.

இந்த “உடல் எடை கொழுப்பை குறைக்கும் 30 வகை உணவுகள்” தொடரில், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய ஆரோக்கியமான உணவை பற்றி தெரிந்து கொள்வோம். அது எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது, எப்போது அதை சாப்பிடலாம், எத்தனை அளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதையும் இத்தொடரில் விரிவாகப் பார்க்கலாம் வாங்க.

இது ஒரு டயட் அல்ல, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றம். அடுத்த 30 நாட்கள் இந்த தொடரை பின்பற்றினால், உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் அடையும்.

Fermented Foods That Best for Your Health

Episode: 1 அரிசி ரவா உப்புமா:

தேவையான பொருட்கள் :

  • அரிசி ரவை – 1 கப்
  • பெரிய வெங்காயம் – 1
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய் -2
  • விருப்பமான காய்கறிகள் – அரை கப்
  • பெருங்காயம் – அரை டீஸ்பூன்
  • கருவேப்பிலை -சிறிதளவு
  • எலுமிச்சை ச் சாறு – 2 டீஸ்பூன்
  • துவரம்பருப்பு or கடலைப்பருப்பு -கால் கப்
  • உப்பு -தேவையக்கேற்ப

தாளிக்க :

  • கடுகு – அரை டீஸ்பூன்
  • உளுத்தப்பருப்பு -ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு -ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சை மிளகாயைக் கிறிக்கொள்ளுங்கள். வெங்காயம் ,தக்காளி ,காய்கறிகளை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். துவரம்பருப்பை ஊற வைக்கவும்.

குக்கரில் எண்ணெய்க் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன்னிறமானதும், வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கி ,தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின் இரண்டரை கப் தண்ணீர் சேருங்கள்.பிறகு தேவையான அளவு உப்பு, காய்கறி,கருவேப்பிலை ,எலுமிச்சப்பழச் சாறு ,பெருங்காயம் ,ஊற வைத்த துவரப்பருப்பு சேர்த்து கொதிக்கும் போது அரிசி ரவை சேர்த்து கிளறவும்.

கொதி வந்தவுடன் குக்கரை மூடி, மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு வேகவிட்டு இறக்கினால், சுடசுட அரிசி ரவா உப்புமா ரெடி.

சில நேரங்களில் டயட்டைக் காட்டிலும், நல்ல உணவு பழக்கம் தான் நீண்ட நாள் பலனை தரும். எனவே, இயற்கையான உணவு,காய்கறிகளை விரும்பி சாப்பிடுங்கள், போதிய அளவு தண்ணீர் குடியுங்கள், உடற்பயிற்சி செய்ய மறந்துவிடாதீர்கள். உங்கள் ஆரோக்கிய பயணம் இன்று முதல் தொடங்கட்டும்.

Summary:

This 30-day series introduces natural fat-burning foods that support healthy weight loss. Learn how simple dietary changes can reduce fat and improve energy. Each episode explores one food, its benefits, and the right way to include it in your diet.
Stay consistent, eat smart, and transform your health naturally.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *