‘சிக்மா’ – விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம்! பணக்கட்டுகள் மேல் சந்தீப் கிஷன் அதிரடி போஸ்டர் வெளியீடு

196.jpg

நடிகரும், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுக படமாகும். ஜேஎஸ்கே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் சொந்த தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சந்தீப் கிஷன் நடிக்கிறார். இசையை தமன் அமைக்கிறார். பணம் மற்றும் ஆக்ஷனை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, படத்திற்கு ‘சிக்மா’ (SIGMA) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட போஸ்டரில், பணக்கட்டுகளின் மேல் சந்தீப் கிஷன் அமர்ந்திருக்கும் காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளதால், ஜேசன் சஞ்சயின் இயக்குநர் அறிமுகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

Summary :
Jason Sanjay, son of actor Vijay, makes his directorial debut with ‘SIGMA’. Sundeep Kishan stars; Lyca and JSK Media produce the action film.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *