டெல்லி கார் வெடிப்பு அதிர்வு: கடலூரில் போலீசாரின் விடிய விடிய சோதனை!

207.jpg

டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, விடிய விடிய அதிரடி வாகன சோதனைகள் நடத்தினர்.

நேற்று மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்து தீப்பிழம்பாக மாறியது. வெடிப்பின் தாக்கம் மிகுந்ததால், அருகில் இருந்த நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சில வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த திடீர் வெடிப்பால் அந்தப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கார் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டதாகவும், சாலையில் சென்ற பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆரம்பத்தில் 9 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பேட்டரி வெடிப்பா, காஸ் சிலிண்டர் வெடிப்பா, அல்லது வேறு நாசவேலைவா என்ற கோணங்களில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஐஏ (NIA) விசாரணையிலும் இணைந்துள்ளது.

இதன் தாக்கமாக, தமிழ்நாட்டின் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில், உட்லண்ட்ஸ் பாயிண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் மற்றும் அதிவிரைவுபடை வீரர்கள் இணைந்து வாகன சோதனைகளை விடிய விடிய மேற்கொண்டனர்.

அதேபோல், விழுப்புரம் எஸ்.பி சரவணன் தலைமையில் பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. டெல்லி வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய எந்த அசாதாரண நிகழ்வும் தமிழ்நாட்டில் இடம்பெறாமல் தடுக்க, போலீசார் அதிக விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Summary :
Following the Delhi car blast, Cuddalore and Villupuram police launched overnight vehicle checks amid intensified security operations.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *