ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை வழக்கு: துப்பாக்கிச் சூட்டில் நாகராஜ் பிடிப்பு — அதிரடி நடவடிக்கை!

0247.jpg

 ராஜபாளையம் அருகே உள்ள பழமையான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை இன்று காலை போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பிடித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சேத்தூரை அடுத்த தேவதானம் பகுதியில் அமைந்துள்ள இந்த கோவில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இங்கு இரவு காவலாளிகளாக பணியாற்றி வந்த பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் வழக்கம்போல் முன்தினம் இரவில் கோவிலில் பணியில் இருந்தனர். ஆனால், மறுநாள் காலை பகல் காவலாளி மாடசாமி கதவைத் திறந்தபோது, இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்தக் குளத்தில் கிடந்தனர்.

இதையடுத்து சேத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் ராஜபாளையம் பகுதியை அச்சத்தில் ஆழ்த்தியது.

இரட்டை கொலைக்குப் பிறகு, குற்றவாளியை கைது செய்ய சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று காலை போலீசார் நாகராஜ் என்பவரை கைது செய்ய முயன்றனர்.

அப்போது அவர் தப்பிக்க முயன்றதுடன், போலீசாரை தாக்கி ஓட முயன்றார். சரணடையும்படி எச்சரித்தும், அவர் கேட்காத நிலையில், பாதுகாப்பு கருதி போலீசார் அவரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டு பாய்ந்த நாகராஜ் தரையில் விழுந்தார்.

பின்னர் போலீசார் அவரை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Summary :
Nagaraj, accused in the Rajapalayam temple double murder, was shot in the leg and arrested by Tamil Nadu police after attempting to flee.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *