தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி (SIR) தற்போது பல்வேறு குழப்பங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நோக்கில் தொடங்கிய இந்தச் செயல்முறை, உண்மையான வாக்காளர்களின் பெயர்களே பட்டியலில் இருந்து நீக்கப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மொபைல் எண், முகவரி பிரச்சனை:
மொபைல் எண் இணைப்பில் கோளாறுகள், பழைய பதிவுகள், முகவரி மாற்றங்கள் ஆகிய காரணங்களால் பலர் தங்கள் விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். சில மாவட்டங்களில், வரைவுப் பட்டியலிலேயே ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:
இது வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் பெயரில், குறிப்பிட்ட வாக்காளர்களை நீக்க முயற்சியாகவே உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், போலியான மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்குவதே நோக்கம் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆவண குழப்பம்:
1987, 2004 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் பிறந்தவர்கள் பெற்றோரின் அடையாள ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிகள் வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு டிஜிட்டல் நடைமுறை சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழி மற்றும் சரிபார்ப்பு சிக்கல்:
சில இடங்களில் வீடு வீடாக சரிபார்க்காமல் வாட்ஸ்அப் மூலம் தகவல் சேகரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், படிவங்கள் ஒரே மொழியில் வெளியிடப்படுவதால் புரிந்துகொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தேர்தல்கள் நெருங்கும் நிலையில், இந்தச் செயல்முறை தகுதியான வாக்காளர்களின் உரிமையை பறிக்குமா என்ற கேள்வி தற்போது தீவிரமாக எழுந்துள்ளது.
Summary :
Special voter list revision (SIR) in Tamil Nadu triggers confusion as technical glitches and address mismatches threaten voter rights.








