பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்றுக் காலை தொடங்கியது. தொடக்கத்திலேயே தேசிய ஜனதா கூட்டணி (என்.டி.ஏ) திடீர் வலிமையுடன் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க 84 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரில் கடந்த 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்குப்பதிவு 66.91% ஆக உயர்ந்தது. இது மாநிலத்தில் 1951 க்கு பிறகு பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் ‘விவிபாட்’ ஒப்புகை சீட்டு கருவிகள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 46 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபையில் ஆட்சியை பிடிக்க 122 இடங்கள் தேவைப்படுகிறது.
தொடக்கத்தில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் சில இடங்களில் முன்னிலை வகித்திருந்தாலும், பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, என்.டி.ஏ 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க 84 இடங்களில் முன்னிலைப் பிடித்துள்ளது.
Summary :
BJP dominates Bihar Assembly vote count with NDA leading in over 180 seats, tightening its hold as counting continues across key centres.







