எலுமிச்சை நீர்
பொதுவாக எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கின்றனர். ஆனால் இதைப் போலவே இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பதனால் மெட்டபாலிசம் மேம்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளன, இது உடலில் நச்சுக்களை நீக்கி, தொப்பை குறைக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து குடிக்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் உடல் எடையைக் குறைக்க பிரபலமாக உள்ளது. 1 டேபிள்ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்கவும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், மெட்டபாலிசத்தையும் தூண்டி, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.
மஞ்சள் பால்
மஞ்சள் பாலில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கின்றன. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இரவு நேரங்களில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பாலை குடித்தால் தொப்பை குறையக்கூடும்.
இளநீர்
இளநீர் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் மட்டுமின்றி, மெட்டபாலிசத்தையும் மேம்படுத்துகிறது. கலோரிகள் குறைவாக இருப்பதால், இரவில் குடிப்பதன் மூலம் தொப்பை குறைய உதவியாக இருக்கும்.
இஞ்சி டீ
இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இரவில் ஒரு டம்ளர் இஞ்சி டீ குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. இது தொப்பையை குறைக்கும் நம்பகமான வழியாக இருக்கலாம்.
முக்கிய குறிப்புகள்:
இந்த பானங்களை சரியான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
உடல்நலம் குறித்த சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
குறிப்பு:
மேற்கண்ட தகவல்கள் பொதுவான வழிகாட்டுதல்களாகும். எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முன் நிபுணர்களின் ஆலோசனை பெறவும்.