உணவின் ஆரோக்கியம் மட்டுமல்ல, அது உங்கள் பாலியல் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது! பல ஆண்கள் விறைப்புத் திறன் குறைபாடால் (Erectile Dysfunction) பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இரத்த ஓட்ட குறைவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், புகைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்கள் காரணமாக இருக்கலாம்.
ஆனால் சரியான உணவுகளை உள்வாங்குவதன் மூலம், இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம். அதனால் உறவில் நீண்ட நேரம் உற்சாகமாக இருக்க தேவையான சில சிறப்பு உணவுகள் இதோ.
1. பச்சை இலைகள் & காய்கறிகள்
கீரை, செலரி, முட்டைக்கோஸ், பீட்ரூட் போன்றவை நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விறைப்புத் திறனை அதிகரிக்க உதவும்.
2. தர்பூசணி
தர்பூசணியில் உள்ள எல்-சிட்ருலின் மற்றும் லைகோபீன் என்ற முக்கிய கூறுகள் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நீண்ட நேரம் உற்சாகமாக இருக்க உதவுகின்றன.
3. டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மற்றும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க, பாலியல் ஆர்வத்தையும் ஊக்குவிக்க உதவுகிறது.
4. பிஸ்தா
ஒரு கைப்பிடி பிஸ்தா தினமும் சாப்பிட்டால், அது ஆண்மைத் திறனை மேம்படுத்தும். அதில் உள்ள அர்ஜினைன், நல்ல கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி, இரத்த நாளங்களை தளர்வடைய செய்யும்.
5. தக்காளி
தக்காளியில் உள்ள லைகோபீன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, விறைப்புத் திறன் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. உறவில் ஈடுபடும் முன் தக்காளி சாலட் சாப்பிட்டால் உற்சாகம் அதிகரிக்கும்.
6. முருங்கைக்காய்
முருங்கைக்காய், முருங்கைப்பூ, முருங்கைக்கீரை ஆகியவை நேச்சுரல் வயாகரா என்று அழைக்கப்படும்! இது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, பாலுணர்ச்சி இருமடங்கு அதிகரிக்கச் செய்யும்.
7. வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் உற்சாகமாக இருக்க உதவுகிறது.
முக்கிய குறிப்புகள்:
இவை இயற்கையான உணவுகள், பாதுகாப்பாக உண்ணலாம்.
உடல்நலம், பாலியல் ஆரோக்கியம் பற்றி சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
புகைப்பிடித்தல், அதிக மது பருகல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.
இந்த சிறப்பு உணவுகளை உணவில் சேர்த்துக்கொண்டு, உங்கள் உறவு வாழ்க்கையை மிகவும் ஆரோக்கியமாக மாற்றிக் கொள்ளுங்கள்!