குழந்தைகள் உள்ள வீட்டில் சமையலறையை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்?

0382.jpg

சமையலறை என்பது வீட்டில் உள்ள முக்கியமான மற்றும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றாகும். சிறிய குழந்தைகள் உள்ள வீட்டில், சமையலறையில் ஏற்படும் ஆபத்துகள் மிகவும் தீவிரமானவை ஆக இருக்கலாம். பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சமையலறையை பாதுகாப்பாக வைத்திருக்க சில முக்கியமான குறிப்புகள்:

 கிச்சனை பூட்டியிருங்கள்

குழந்தைகள் தனியாக சமையலறைக்குள் செல்லாமல் இருக்க, வீட்டு பெரியவர்கள் இல்லாதபோது கதவை பூட்டிவைக்கவும்.
 தேவையான உணவுகளை முன்னதாக வெளியே எடுத்துவைத்து பரிமாறலாம்.


 சமையல் பொருட்களின் பாதுகாப்பு

அடுப்பில் உள்ள பாத்திரங்களின் கைப்பிடிகள் வெளியே திரும்பாமல் இருக்கவேண்டும்.
 பூரி, கரி போன்றவற்றை சமைத்த பிறகு, கடாயை எண்ணெய் விட்டு வைக்காமல் பாதுகாக்கவும்.
 எண்ணெய் குளிர்ந்த பிறகு அதை சரியான முறையில் சேமிக்க வேண்டும்.


 மிக்ஸி & மின்னணு சாதனங்கள் பாதுகாப்பு

மிக்ஸியை பயன்படுத்திய பிறகு, பிளக்கிலிருந்து அகற்றவும் அல்லது சுவிட்சை அணைக்கவும். குழந்தைகள் தவறுதலாக இயக்காமல் இருக்க, மிக்ஸியை அவர்கள் கையில் எட்டாத இடத்தில் வைக்கவும்.
மின் வாரங்கள் சேதமடைந்திருந்தால் உடனே பழுதுபார்க்க வேண்டும்.


 கூரிய மற்றும் எளிதில் உடைய பொருட்கள்

 கத்திகள், முட்கரண்டிகள் போன்றவற்றை உயரத்தில் வைக்கவும்.
கண்ணாடி பாத்திரங்கள், எளிதில் உடைய பொருட்கள் குழந்தைகள் எட்டாத இடத்தில் இருக்க வேண்டும்.


 தீ விபத்து மற்றும் எரிவாயு பாதுகாப்பு

தீக்குச்சிகளை குழந்தைகள் எட்டாத இடத்தில் வைக்கவும்.
 சமையலுக்கு பிறகு கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை மூடி வைக்க வேண்டும்.
 கை துண்டுகள், காகிதங்கள் அடுப்புக்கு அருகில் இருக்கக்கூடாது.


 தூய்மை & ஒழுங்கு

 சமையலறையில் தண்ணீர் கொட்டியிருந்தால் உடனே துடைக்க வேண்டும்.
மிளகாய் பொடி, மசாலா பொருட்களை உடனே மூடி வைக்கவும்.
வெட்டுபலகை, கத்திகளை பயன்படுத்திய பிறகு ஹோல்டரில் வைக்க வேண்டும்.


இந்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றினால், குழந்தைகள் உள்ள வீட்டில் கூட சமையலறை பாதுகாப்பாக இருக்கும்.   சுற்றியுள்ள குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பது உங்கள் கையில்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *