இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – அதிகாலை மக்கள் அதிர்ச்சி!

0041.jpg

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என பதிவான இந்த நிலநடுக்கம், வீடுகளை தள்ளாடச் செய்தது. அதிகாலை நேரம் என்பதால் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்தோனேசியா நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் “ரிங் ஆப் பயர்” பகுதியில் அமைந்துள்ளதால், அடிக்கடி நிலநடுக்கங்கள் நடப்பது வழக்கம். ஆனால், சில நேரங்களில் அதிதீவிரமான நிலநடுக்கங்கள் நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும்.

தற்போதைய நிலநடுக்கம் இந்நாட்டு நேரப்படி காலை 6.55 மணிக்கு உணரப்பட்டது. இதன் பின்னர் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இருப்பினும், மக்கள் அச்சத்திலிருந்து மீள்வதற்குள், நேற்று அதிகாலை வங்கக் கடலிலும் 5.1 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கொல்கத்தாவிலும் அதன் தாக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கங்கள் இன்னும் பெரிய பேரழிவிற்கு முன்னோட்டமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே, 2021 ஜனவரியில் சுலவேசி தீவுகளில் 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 100 பேர் உயிரிழந்தனர். 2018-ல் பாலு தீவில் நடந்த நிலநடுக்கத்தில் 2,200 பேர் கொல்லப்பட்டனர். 2004-ஆம் ஆண்டு, 9.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து வந்த சுனாமியால் 1,70,000 பேர் உயிரிழந்தது.

சமீபத்திய நிலநடுக்கம் இந்தோனேசியா மீதான இயற்கை பேரழிவுகளின் தாக்கம் குறையாமல் இருப்பதை மீண்டும் நிரூபிக்கிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *