You are currently viewing திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதானத்திற்குத் ரூ.44 லட்சம் நன்கொடை – தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி கோயிலில் ஒரு நாள் அன்னதானத்திற்குத் ரூ.44 லட்சம் நன்கொடை – தேவஸ்தானம் அறிவிப்பு

0
0

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒரு நாள் அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்கள் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.

திருப்பதி அன்னதானம் – பக்தர்களுக்கான முக்கிய சேவை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். பக்தர்களுக்கு தினமும் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்த அன்னதான திட்டம், “ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. இது பக்தர்களின் நன்கொடை மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் நடத்தப்படுகிறது.

திருப்பதி கோயிலில் அன்னதானம் வழங்கப்படும் இடங்கள்

மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடம்
வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்
திருமலை பஸ் நிலையம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்
கோவிந்தராஜர் கோயில்
விஷ்ணு நிவாசம், மாதவம் விடுதிகள்

ஒரு நாள் அன்னதான நன்கொடை விவரம்

முழு நாளுக்காக – ரூ.44 லட்சம்
காலை சிற்றுண்டிக்கு மட்டும் – ரூ.10 லட்சம்
மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு – ரூ.17 லட்சம்

இவ்வாறு, அன்னதான சேவையில் பங்கெடுக்க விரும்பும் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு நன்கொடை வழங்கலாம் என TTD தெரிவித்துள்ளது.

Leave a Reply