டிரம்ப் அதிபராக இல்லை… ரஷ்யா உளவாளியா? – வெளியான அதிர்ச்சி தகவல்!

0567.jpg

மாஸ்கோ: சோவியத் யூனியனின் KGB உளவு அமைப்பில் அவர் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், இன்றும் அவரது கேஸ்-ஃபைல் ஆக்டிவாக உள்ளது எமுன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் & ரஷ்யா – மிக நெருங்கிய தொடர்பா?

சமீப காலமாக ரஷ்யாவுடன் டிரம்ப்பின் தொடர்பு அதிகரித்து வருவது அமெரிக்க மக்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், KGB-வுடன் டிரம்ப்பின் பழைய தொடர்பு குறித்து முன்னாள் கஜகஸ்தான் உளவுத்துறை தலைவர் அல்னூர் முசாயே வெளியிட்ட தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அல்னூர் முசாயேயின் அதிர்ச்சி தகவல்:

1987 ஆம் ஆண்டு, டிரம்ப் சோவியத் ரஷ்யாவுக்கு சென்றபோது KGB-யில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு “க்ராஸ்னோவ்” என்ற ரகசிய பெயர் வழங்கப்பட்டது.
சோவியத் ரஷ்யா அதிகாரிகள், தொழிலதிபர்கள், மற்றும் முக்கிய ஆளுமைகளை உளவாளிகளாக மாற்ற திட்டமிட்டது.
டிரம்பின் ரியல் எஸ்டேட் பயணங்கள், உண்மையில் அரசியல் நோக்கத்திற்காக நடந்தவை என்றும் தகவல்.
இன்றும் கூட KGB-வில் டிரம்பின் கேஸ்-ஃபைல் செயல்பாட்டில் உள்ளது.

வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியின் சந்தேகம்
டிரம்ப் அதிபராக இருந்த 2017 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றிய அந்தோனி ஸ்காரமுச்சி கூட, “புதினுடன் தொடர்புடைய விஷயங்களில் டிரம்ப் எதற்காக மென்மையாக இருக்கிறார்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

டிரம்பின் சமீபத்திய நடவடிக்கைகள் – சந்தேகத்தை அதிகரிக்கிறதா?

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிராக ஓட்டு போட்டது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக அதிகமாக பேசியது.
வரலாற்றில், ரஷ்யா & அமெரிக்கா சேர்ந்து ஒரே தீர்மானத்திற்கு வாக்களித்தது வெறும் நான்கு முறை மட்டுமே –

2001 – 9/11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத எதிர்ப்பு
2017 – வடகொரிய அணுகுண்டு தடைகள்
2021 – கொரோனா தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தம்
2025 – உக்ரைன் போருக்கு எதிரான தீர்மானம்
இதில் முதல் மூன்று முக்கியம் இல்லாதது. ஆனால், 2025-ல் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காமல், ரஷ்யாவுடன் இணைந்து எதிராக வாக்களித்தது பெரும் சர்ச்சை.

டிரம்ப் மறுப்பு

இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.
“இவை அனைத்தும் பொய் தகவல்கள்.
எனக்கும் ரஷ்ய உளவுத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், வாசகர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?  டிரம்ப் உண்மையில் ரஷ்ய உளவாளியா?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *