நடிகர் விஜயை இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சந்தித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், தனது கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மார்ச் 24 அன்று ‘டிராகன்’ திரைப்படக் குழுவினர் அவரை சந்தித்துள்ளனர். விஜய் அவர்களை பாராட்டிய நிலையில், அப்படத்தின் கதாநாயகன் பிரதீப், விஜயுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இது மிகுந்த மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார்.
TVK தலைவரை இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சந்தித்த நிகழ்வு :
பிரதீப் ரங்கநாதன் கூறியிருப்பதாவது : “விஜய் சார் என்னைப் பார்த்து ‘கலக்குறீங்க ப்ரோ’ என்று சொன்னார்… தளபதியிடமிருந்து இப்படி கேட்கும்போது, நீங்கள் எல்லோரும் நினைத்துப்பாருங்கள் நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை? எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் அனைவராலும் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கும் நேரம் ஒதுக்கி எங்களை சந்தித்ததற்கும் நன்றி சார். சச்சின் பட மறுவெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன் ” என்று பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் டிராகன் நாயகன் பிரதீப்.
விஜய் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சச்சின் திரைப்படம் மீண்டும் வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.