You are currently viewing டெல்லியில் அரங்கேறிய வெறிச்செயல்! 7 வயது குழந்தை பலி!

டெல்லியில் அரங்கேறிய வெறிச்செயல்! 7 வயது குழந்தை பலி!

0
0

டெல்லியில் தொலைக்காட்சி ரிமோட்டிற்காக 7 வயது சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேர்ந்த கொடூரம்:

வெறும் டிவி ரிமோட்டுக்காக தந்தையின் நண்பனே 7 வயது சிறுமியை கொலை செய்துள்ளான்.

மதுபோதையில் இருந்த 35 வயது ரஞ்சித் சிங் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சிறுமி அடம்பிடித்ததால் ஆத்திரமடைந்த அவன், அறைந்து கீழே தள்ளியதில் காயமடைந்த குழந்தை கவலைக்குரிய நிலையை எட்டியதும் கழுத்தை நெரித்துக் கொன்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எதிர்பாராத விதமாக வெளிச்சத்துக்கு வந்த உண்மை:

அப்பகுதியில் திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்த தலைமைக் காவலர் பூபேந்திரா விசாரிக்கையில், படுக்கையறையில் சிறுமியின் காயம்பட்ட உடல் கண்டறியப்பட்டது.

உயரதிகாரிகள் வந்ததும் கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை தீவிரமானது.

பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் இல்லையெனினும், சிறுமியின் மரண காரணம் அறிய பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளது.

ரஞ்சித் தாக்கியதில் மயக்கமடைந்த சிறுமிக்கு ரத்தம் வந்த நிலையில்,

சுயநினைவு திரும்பினால் சிக்கலாகலாம் என எண்ணி, அருகில் கிடந்த உலோகக் கம்பியால் அவளது கழுத்தில் கொடூரமான காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிக இரத்தப்போக்கு காரணமாக சிறுமி உயிரிழந்த பின், உடலைத் துணிகளில் சுற்றி படுக்கைக்கு அடியில் மறைத்துவிட்டு, சிறுமியின் தந்தையின் கைபேசியையும் எடுத்துக்கொண்டு அவன் தப்பிச் சென்றுள்ளான் என்று போலீசார் கூறியுள்ளனர்.

 

Summary:  A shocking incident in Delhi has resulted in the death of a 7-year-old girl who was beaten and strangled by her father’s friend over a television remote. The accused, a 35-year-old man under the influence of alcohol, has been arrested. He reportedly killed the child after she insisted on having the remote, fearing he would be caught after initially assaulting her.

Leave a Reply