You are currently viewing சொத்து வாங்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! 1% கட்டண குறைப்பு!

சொத்து வாங்கும் பெண்களுக்கு ஜாக்பாட்! 1% கட்டண குறைப்பு!

0
0

பெண்கள் பெயரில் சொத்து பதிவு.! 10ஆயிரம் ரூபாய் தள்ளுபடி.! யாருக்கெல்லாம் சலுகை?

2025 முதல் பெண்கள் பெயரில் சொத்துகளைப் பதிவு செய்தால் 1% கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊக்குவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும், யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களைப் பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் பெண்கள் சொத்துரிமை பெறுவது மேலும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு, அசையா சொத்துக்கள் வாங்குவதிலும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2025 முதல், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ. 10 லட்சம் வரையிலான வீடுகள், மனைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு பதிவு கட்டணம் 1% குறைக்கப்படும்.

இந்த சலுகை யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பத்திரப்பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

யாருக்கெல்லாம் சலுகை?

குடும்ப உறுப்பினர்களுடன், குடும்பம் அல்லாதவர்களும் இணைந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த சொத்து முழுக்க முழுக்க பெண்களின் பெயரில் இருந்தால் இந்த சலுகை பொருந்தும்.

அதேபோல, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இணைந்து வாங்கினாலும், சொத்து முழுவதும் பெண்களின் பெயரில் இருக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் சலுகை இல்லை?

கணவன் மனைவி கூட்டாக ஒரு சொத்தை வாங்கினால் இந்த சலுகை கிடையாது. மேலும், குடும்ப உறுப்பினர்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாங்கினாலும், அல்லது குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பெயரில் வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.

பெண்களுக்கு சொத்து: 2400 சதுர அடி காலி நிலத்தை சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் என்ற நிலையில், இரண்டு 1200 சதுர அடி மனைகளாகவோ அல்லது நான்கு 600 சதுர அடி மனைகளாகவோ பிரித்து, குடும்ப உறுப்பினர்கள் அல்லது வெளியாட்கள் என யார் பெயரில் பெண்கள் வாங்கினாலும் ஆவணப் பதிவில் சலுகை பெறலாம்.

பெண்களுக்கான சொத்துப்பதிவு சலுகையைப் பெற, ஒரு பெரிய காலி மனையை சிறு பகுதிகளாகப் பிரித்து, ஒரே பெண் பெயரில் ஆவணங்கள் தாக்கல் செய்தால் அந்த சலுகை வழங்கப்படாது.

உதாரணமாக, ₹12 லட்சம் மதிப்புள்ள 2400 சதுரடி மனையை இரண்டு அல்லது நான்கு பகுதிகளாகப் பிரித்து பதிவு செய்ய முயன்றால், இந்த சலுகை பொருந்தாது.

மேலும், சொத்தின் சந்தை மதிப்பு ₹10 லட்சத்தைத் தாண்டினாலும் இந்த சலுகை கிடையாது. மதிப்பீடு அல்லது கள ஆய்வுக்குப் பின் மதிப்பு அதிகரித்தால் கூட சலுகை ரத்து செய்யப்படும்.

Summary:

Starting April 1, 2025, women in Tamil Nadu will benefit from a 1% reduction in property registration fees for properties valued up to ₹10 lakh registered solely in their names, making property ownership more accessible.

Leave a Reply