போஷாக்கான கோதுமை பீட்சா! வீட்டில் செய்யலாம் வாங்க!

Wheat Pizza Homemade

வீட்டில் சுவையான கோதுமை பீட்சா செய்வது எப்படி? எளிய செய்முறை!

கோதுமை பீட்சா ரெசிபி (Wheat Pizza Recipe )
இந்த ரெசிபி மூலம் நீங்கள் வீட்டில் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோதுமை பீட்சாவை எளிதாக செய்யலாம்.

தேவையானவை :

கோதுமை மாவு, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, வெதுவெதுப்பான நீர், ஆலிவ் எண்ணெய் (அடிப்படைக்கு). தக்காளி, பூண்டு, வெங்காயம், ஆரிகானோ, உப்பு, மிளகுத்தூள், ஆலிவ் எண்ணெய் (சாஸுக்கு). மொஸரெல்லா சீஸ், விருப்பமான காய்கறிகள்/டாப்பிங்ஸ்.

செய்முறை :

மாவு, ஈஸ்ட், சர்க்கரை, உப்பு கலந்து வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசைந்து, எண்ணெய் தடவி
1-2 மணி நேரம் உப்ப விடவும்.

சாஸ் :

1.தக்காளிளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் கழித்து எடுக்கவும். தோல் உரித்துவிட்டு மிக்சியில்
போட்டு அரைக்கவும்.
2.ஒரு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம்
சேர்த்து லேசாக வதக்கவும்.
3.அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
4.ஆரிகானோ, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
5.சாஸ் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து சாஸை ஆற
விடவும்.

பீட்சா :

மாவை தேய்த்து, சாஸ் தடவி, சீஸ் மற்றும் டாப்பிங்ஸ் தூவவும்.

பேக் :

200°C-ல் 15-20 நிமிடம் பொன்னிறமாக பேக் செய்யவும்.

 

Summary:This recipe provides a simple and healthy way to make delicious wheat pizza at home. It includes instructions for preparing a whole wheat base, a flavorful homemade tomato sauce, and baking it to golden perfection with mozzarella cheese and your favorite toppings.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *