You are currently viewing விஜய் கடைசி படம் : ஓடிடி உரிமையில் கடும் போட்டி!

விஜய் கடைசி படம் : ஓடிடி உரிமையில் கடும் போட்டி!

0
0

சென்னை:

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

கே.வி.என் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பொறுப்பை அனிருத் கவனித்து வருகிறார்.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. ‘ஜன நாயகன்’ திரைப்படம் அரசியல் பின்னணியில் உருவாகும் ஒரு அதிரடி கிரைம் திரில்லர் கதையம்சத்தைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 400 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது.

அதேபோல், இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை பார்ஸ் பிலிம் நிறுவனம் 78 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது.

இது விஜய்யின் கடைசி படம் என்று பரவலாக பேசப்படுவதால், இப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘ஜன நாயகன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Summary : Vijay’s 69th film, ‘Jana Nayagan’ directed by H. Vinoth, is a highly anticipated Tamil political crime thriller with a ₹400 crore budget and a planned Pongal release. Featuring a strong ensemble cast and music by Anirudh, the film’s Tamil Nadu theatrical rights were valued at ₹100 crore, overseas at ₹78 crore, and the OTT rights have been secured by Netflix amidst speculation about it being Vijay’s final movie.

Leave a Reply