You are currently viewing ஆரோக்கியம் vs ஆபத்து! – சப்பாத்தியும் புற்றுநோயா?

ஆரோக்கியம் vs ஆபத்து! – சப்பாத்தியும் புற்றுநோயா?

0
0

சப்பாத்தி சாப்பிட்டா புற்றுநோய் வருமா? சமைக்கும்போது இந்த 4 தப்பு செஞ்சா கண்டிப்பா வருமாம்

சின்ன உடல் உபாதைகளுக்கு சமையலறை வைத்தியம் பார்க்க ஓடுறோம். ஆனா அதே சமையலறை புற்றுநோயை உண்டாக்கினா? ஒரு சப்பாத்தி ஆபத்தான புற்றுநோய்க்கு காரணமா இருந்தா? ஆமாங்க, சப்பாத்தி செய்யும்போது இவ்ளோ ஆபத்து இருக்கு! என்னென்னன்னு தெரிஞ்சுக்கலாமா?

சப்பாத்தியை எண்ணெயில்லாமல் சுட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகும் எனப் பலர் நினைக்கின்றனர். அதனால், நேரடியாக நெருப்பில் சுடுகின்றனர்.

ஆனால், கேஸ் அல்லது விறகு அடுப்பின் புகை புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் வாயுக்களைக் கொண்டிருப்பதால், அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது. இந்த ஆபத்து ரொட்டிக்கு மட்டுமல்ல, இறைச்சியை நேரடியாக நெருப்பில் சுடுவதற்கும் பொருந்தும்.

பொதுவாக ஒட்டாமல் சமைக்க நான்-ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். ஆனால், அவற்றில் சிறிய கீறல் ஏற்பட்டாலும் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தான ரசாயனங்கள் வெளிப்படும். எனவே, நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கு பதிலாக இரும்புப் பாத்திரங்களில் சமைப்பது மிகவும் நல்லது.

கருகிய உணவு ஆபத்து :

சப்பாத்தி, பிரெட் போன்றவற்றை சிலர் வேண்டுமென்றோ அல்லது கவனக்குறைவாகவோ கருக விடுகின்றனர். இப்படி கருகிய உணவுகளை உண்பது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதனால், கருகிய பகுதியை நீக்கிய பிறகே சாப்பிட வேண்டும். தொடர்ச்சியாக கருகிய உணவுகளை உட்கொள்வது உடல் நலத்திற்கு ஆபத்தானது.

அலுமினியம் ஃபாயில் பேப்பரில் உணவு :

அலுமினியம் ஃபாயில் பேப்பரில் உணவு பொதிவது வீட்டு வழக்கமாகிவிட்டது. முன்பு ஹோட்டல்களில் மட்டுமே இருந்தது. லஞ்ச் பாக்ஸில் சப்பாத்தியை இதில் சுற்றி அனுப்புகிறார்கள். இதன் ஆபத்து பலருக்கு தெரிவதில்லை. நேரடியாகவோ அல்லது காட்டன் துணியிலோ பொதிக்கலாம்.

சப்பாத்தி நல்லதா கெட்டதா என்ற விவாதத்திற்கு இடையே, நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் பல விஷயங்கள் ஆபத்தாகலாம்; புற்றுநோய் வரை விளைவுகள் உண்டாகலாம்.

Summary:

While chapati is generally considered healthy, certain cooking and handling methods can potentially increase cancer risk. Directly cooking chapati over a gas or wood flame exposes it to carcinogenic gases. Using scratched non-stick cookware can release harmful chemicals. Eating burnt chapati or bread is dangerous, and wrapping hot chapatis in aluminum foil can also be detrimental. Avoiding these four common mistakes is crucial for healthy consumption.

Leave a Reply