தள்ளிப் போகும் கார்த்தியின் வா வாத்தியார் – என்ன காரணம் தெரியுமா? – Vaa Vaathiyar Movie
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்கிறார்.
சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கார்த்தியின் 26-வது திரைப்படமான இப்படத்தில் இடம்பெற்ற “உயிர் பத்திக்காம” எனும் பாடலின் வரிகள் அடங்கிய காணொளி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
படக்குழுவினர் இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.
படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளது :
அதே நேரத்தில், கார்த்தி இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார் 2’ படப்பிடிப்பிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால், ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படலாம்.
சர்தார் 2 படத்திற்கான படப்பிடிப்பு தேதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் கார்த்தி ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary:
Karthi’s upcoming film ‘ Vaa Vaathiyar Movie ‘, directed by Nalan Kumarasamy, which was initially planned for a Pongal release, has been delayed.
The film, featuring Karthi as a police inspector and starring Keerthy Shetty and Sathyaraj, still requires about 20 more days of filming.
The delay is also attributed to Karthi focusing on the shooting of ‘Sardar 2’ directed by P.S. Mithran, which might cause scheduling conflicts for ‘Vaa Vaathiyaar’.
The team now anticipates a release in August or November after completing the remaining shoot and post-production.