You are currently viewing Moringa vs Yogurt Protein | சூப்பர்ஃபுட் முருங்கை!

Moringa vs Yogurt Protein | சூப்பர்ஃபுட் முருங்கை!

0
0

Moringa vs Yogurt Protein : தயிரை விட 9 மடங்கு புரதமா முருங்கையில? நம்பலாமா?

இணையத்தில் முருங்கையைப் பற்றி நீங்கள் முதலில் படிக்கும் விஷயங்களில் ஒன்று, அதில் தயிரை விட ஒன்பது மடங்கு அதிக புரதம் உள்ளது என்பதுதான்.

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என்று முருங்கை கருதப்படுவதால், இது குறித்து நிபுணர் கருத்துக்களை உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

முருங்கை வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் பல பி வைட்டமின்கள், அத்துடன் கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும்.

மேலும், முருங்கைக்காயில் ஃபிளாவனாய்டுகள், பாலிஃபீனால்கள் மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளிட்ட அதிக அளவு ஆன்டிஆக்சிடண்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை நடுநிலையாக்க உதவுகின்றன.

ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கின்றன. இது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்,” என்று ஆர்டெமிஸ் லைட், என்எஃப்சி மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சங்கீதா திவாரி கூறினார்.

அது மட்டுமல்லாமல், முருங்கைக்காய் நார்ச்சத்து நிறைந்ததாகக் கூறப்படுகிறது, இது வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளுக்கு உதவுகிறது. .

மறுபுறம், தயிர் அல்லது யோகர்ட் புரதத்தின் நல்ல மூலமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், இது தசை ஆரோக்கியம் மற்றும் வலிமைக்கு அவசியம். “தயிர் புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளது.

இது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளுக்கு உதவுகிறது, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது,” என்று மும்பை சென்ட்ரல், வோக்கார்ட் மருத்துவமனைகளின் உள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரிதுஜா உகல்முக்லே கூறினார்.

அப்படியானால், முருங்கையில் தயிரை விட 9 மடங்கு அதிக புரதம் உள்ளதா?

மும்பை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா உணவியல் நிபுணர் ஃபௌசியா அன்சாரி சில விளக்கங்களை அளித்தார். “முருங்கைக்காயில் தயிரை விட ஒன்பது மடங்கு அதிக புரதம் உள்ளது என்ற கூற்று விவாதத்திற்குரியது.

முருங்கைக்காய் உண்மையில் ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான மற்றும் தாவர அடிப்படையிலான சிறந்த புரத மூலமாகும்.

குறிப்பாக சைவ உணவு உண்பவர்கள் மற்றும் வீகன் உணவு உண்பவர்களுக்கு. யோகர்ட், குறிப்பாக கிரேக்க யோகர்ட், புரதச்சத்து நிறைந்தது.

ஆனால் ஒன்று மற்றொன்றை விட 9 மடங்கு சிறந்தது என்று கூறும் எந்த ஒரு ஆய்வும் இல்லை,” என்று அன்சாரி கூறினார், சமச்சீர் உணவு எப்போதும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

Summary:  Moringa vs Yogurt Protein

The article explores the nutritional benefits of moringa (drumsticks) and addresses the common claim that it contains nine times more protein than yogurt.

While moringa is a nutrient-rich superfood packed with vitamins, minerals, and antioxidants, and is a good source of plant-based protein.

Leave a Reply