You are currently viewing AI Film “Love You”-AI-யில் உருவான முதல் படம்!

AI Film “Love You”-AI-யில் உருவான முதல் படம்!

0
0

AI Film “Love You”- உலகின் முதல் AI திரைப்படம்; ரூ.10 லட்சம் செலவில் இருவரால் எடுக்கப்பட்ட லவ் யூ படம்!

‘லவ் யூ’ – முழுவதுமாக செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட முதல் கன்னடத் திரைப்படம்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இந்த காலகட்டத்தில், உலகிலேயே முதன்முறையாக முழுமையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘லவ் யூ’ என்ற இந்த திரைப்படத்தை இயக்கியவர் நரசிம்ம மூர்த்தி ஆவார். இப்படத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அனைத்து பணிகளையும் நூதன் என்பவர் கவனித்துள்ளார்.

மேலும், நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, டப்பிங் என படத்தின் அனைத்து அம்சங்களையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே கையாண்டுள்ளது என்பது வியக்கத்தக்கது.

இந்த படத்தை இயக்கி தயாரித்திருக்கும் நரசிம்ம மூர்த்தி, பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோயிலின் அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

வெறும் 95 நிமிடங்களில் AI புரட்சி – ‘லவ் யூ’ படத்தின் வியக்க வைக்கும் தகவல்கள் :

இயக்குநர் எஸ். நரசிம்ம மூர்த்தி ‘லவ் யூ’ திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்டவை: வெறும் 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தணிக்கைக் குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

ஹீரோவும் AI, ஹீரோயினும் AI: இசை, பாடல், டப்பிங் என அனைத்தையும் AI தான் செய்தது. வெறும் 10 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ‘லவ் யூ’ திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக வெறும் 10 லட்ச ரூபாய் செலவில் முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘லவ் யூ’ திரைப்படம் கன்னடத் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Summary:

AI Film “Love You” marks a groundbreaking achievement as the world’s first feature film created entirely with artificial intelligence.

Made in Kannada for a budget of just ₹10 lakhs, the film utilized AI for acting, music, songs, background score, and dubbing.

Directed by S. Narasimha Murthy and AI-managed by Noothan, the 95-minute film is set for release in May.

Leave a Reply