காமெடி கிங்ஸ் இணைந்தாச்சு! சுந்தர் சி-கார்த்தி படம் ரெடி! – Sundar C Movie
சுந்தர் சி-யின் அடுத்த பட ஹீரோ இவரா? கோலிவுட்டில் உருவாகும் புது கூட்டணி! Sundar C Movie
புத்தம் புதிய படத்தில் கார்த்தியுடன் கைகோர்க்கும் சுந்தர் சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நகைச்சுவை திரைப்படங்கள் என்று சொன்னாலே சட்டென்று நம் நினைவுக்கு வருபவர் சுந்தர் சி தான். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் நிச்சயம் இடம்பெறும்.
குறிப்பாக, அவர் இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘வின்னர்’, ‘கலகலப்பு’ போன்ற திரைப்படங்கள் அந்த நகைச்சுவையின் காரணமாகவே மிகப்பெரிய வெற்றி பெற்றன.
கடந்த சில ஆண்டுகளாக, சுந்தர் சி அவர்கள் நகைச்சுவை படங்களை விட திகில் படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த முயற்சியும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான மதகஜராஜா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த படைப்பான “கேங்கர்ஸ்” கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகத் தயாராக உள்ளது.
இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து சுந்தர் சி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் “கேங்கர்ஸ்” திரைப்படம் வருகிற ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கேத்ரின் தெரசா மற்றும் வாணி போஜன் ஆகிய இரு முன்னணி நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் உருவாகும் இந்த நகைச்சுவை திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு கலகலப்பான திரை அனுபவத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி – கார்த்தி காம்போ :
வெற்றி இயக்குநர் சுந்தர் சி அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் முதன்முறையாக இணையவுள்ளார்.
தற்போது பிஸியான நடிகராக இருக்கும் கார்த்தி, சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டணி காமெடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary :
A new Sundar C movie is in the works, and this time he’s joining forces with popular actor Karthi.
Known for his successful comedy ventures, Sundar C’s collaboration with the busy Karthi has generated considerable buzz within the Tamil film industry (Kollywood).
This upcoming Sundar C movie is expected to be a mix of comedy and commercial entertainment.