கரூர்:
மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல் ஹாசன், கரூரில் சென்று கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தவெக தலைவர் விஜய் இனி ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். அவருக்கு இப்போது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது”என்று தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், நகரச் செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். என். ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகிறார்கள்; அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.