தினமும் ரூ.411 Save பண்ணப் போதும் 15 ஆண்டுகளில் வட்டியுடன் லாபம் எவ்வளவு தெரியுமா? சிறப்பான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!

Untitled-design-16.png

Deposit Fund:

வருங்கால வைப்பு நிதி ( Deposit Fund ) என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டுத் திட்டமாகும். இது அரசாங்க ஆதரவு பெற்ற திட்டமாகும்.

இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும்.

எதிர்காலத்திற்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த சேமிப்பு திட்டம் சிறந்ததாக இருக்கும் என்ற குழப்பம் இருக்கிறது.

அதேபோல், ஓய்வு பெற்ற பின்பும் நிதி பாதுகாப்பான வாழ்க்கையை பலர் விரும்புகிறார்கள்.

அதுவும் எந்த ஆபத்தும் இல்லாமல் மற்றும் அரசாங்க ஆதரவு பெற்ற திட்டங்களை மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏற்ற திட்டம் தான் மத்திய அரசு தபால் அலுவலகம் வழங்கும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் ஆகும்.

இது வெறும் சாதாரண சேமிப்புத் திட்டம் மட்டும் கிடையாது. உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் ஒரு வழியாகும்.

 

வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டுத் திட்டமாகும். அரசாங்க ஆதரவு பெற்ற திட்டமாகும்.

இதில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு (Tax Exemption) கிடைக்கும். இந்த திட்டம் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.

’15+5+5′ Formula :

முதல் 15 ஆண்டுகள்: உங்கள் PPF கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் (ஒரு நாளைக்கு சுமார் ரூ.411) டெபாசிட் செய்ய வேண்டும். 15 ஆண்டுகளின் முடிவில், நீங்கள் மொத்தம் ரூ.22.5 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள்.

மேலும், கூட்டு வட்டியுடன், உங்கள் கணக்கில் மொத்தம் ரூ.40.68 லட்சம் இருக்கும். அதாவது, நீங்கள் சம்பாதித்த வட்டி மட்டும் சுமார் ரூ.18.18 லட்சமாக இருக்கும்.

உதாரணமாக, 25 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கணக்கில் ரூ.1.03 கோடி இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்போது இந்தப் பணத்தை முழுவதுமாக எடுப்பதற்குப் பதிலாக, அதைக் கணக்கில் விட்டுவிடுகிறீர்கள். தற்போதைய PPF வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும்.

உங்கள் கணக்கில் உள்ள மொத்தப் பணம் ரூ.1,03,00,000. ஆண்டு வட்டி (7.1%): ரூ.7,31,300. மாதாந்திர வட்டி: ரூ.60,941.

அதாவது, உங்கள் அசல் தொகையான ரூ.1.03 கோடியைத் தொடாமல், நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.60,941 வட்டியாக மட்டுமே சம்பாதிக்கலாம்.

இது உங்கள் முதிர்வு வாழ்க்கைக்கு பாதுகாப்பான பணமாக இருக்கும்.

இந்திய குடிமகன் யாராக இருந்தாலும், அருகில் இருக்கும் தபால் நிலையத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ கணக்கை திறக்கலாம்.

பெற்றோர்கள் மைனர் குழந்தைகளின் பெயரில் கணக்கைத் திறந்து முதலீடு செய்யலாம். இதற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை.

Summary:

Saving just ₹411 daily in a special Post Office scheme can help you build a significant wealth in 15 years with interest. This long-term savings plan offers guaranteed returns and government safety, making it ideal for secure future planning. It’s a smart way to grow your money steadily over time.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *