கடலைமாவு வைத்து செய்யக்கூடிய 3 எளிய இனிப்புகள்:
ரெஸிபி 1 – பேசன் லட்டு (Besan Laddu):
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 கப்
- நெய் – ½ கப்
- சர்க்கரைப் பொடி – ¾ கப்
- ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
- முந்திரி, திராட்சை ,பாதாம் – உங்கள் விருப்பம் போல்
செய்முறை
ஒரு வாணலில் நெய் ஊற்றி, மெதுவான தீயில் சூடாக்கவும்.
அதில் கடலை மாவை சேர்த்து, நிறம் மாறி மணம் வரும் வரை பொறுமையாக வறுக்கவும்.
அடுப்பை அணைத்து, அது சற்றே குளிர்ந்ததும் பொடி சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து விட்டு விருப்பமெனில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கலாம்.
நெய் சூடாக்கி கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் உருட்டவும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லட்டு வடிவில் அமைக்கவும்.
சிறு குறிப்புகள்:
கடலை மாவு அதிகமாக வறுத்தால் கசப்பு வரும், அதனால் மிதமான தீயில் வறுக்கவும்.
நெய் அளவு சரியாக இருந்தால் லட்டு மென்மையாக வரும்.
ரெஸிபி 2 -பேசன் பர்ஃபி (Besan Burfi):
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – 1 கப்
- நெய் – 150 கிராம்
- சர்க்கரை – ¾ கப்
- ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
கடலை மாவை நெய்யில்மணம் வரும் வரை வறுக்கவும் , சர்க்கரை பாகு தயார் செய்து அதில் ஏலக்காய்த்தூள் மற்றும் மாவை பாகில் சேர்த்து கிளறவும்.பின்பு தட்டில் ஊற்றி ஆறியதும் துண்டுகளாக வெட்டினால் பேசன் பர்ஃபி ரெடி .
ரெஸிபி 3 – பேசன் ஷீரா (Besan Sheera):
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு – ½ கப்
- நெய் – 200 கிராம்
- பால் – 1 கப்
- சர்க்கரை – ½ கப்
- ஏலக்காய் பொடி – சிறிதளவு
செய்முறை:
கடலை மாவை நெய்யில் மெதுவாக நிறம் மாறும் வரை வறுக்கவும்.
பின்பு ,பாலை சேர்த்து கட்டியாகாமல் கிளறவும்.
சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிருதுவாகும் வரை (கட்டியில்லாமல் கூல் பதத்தில் ) கிளறவும்.
பதம் வந்த உடனே மேலே பாதாம் அல்லது பிஸ்தா அலங்காரம் செய்து பரிமாறலாம்.
சின்ன அறிவுரை:
கடலை மாவை எப்போதும் மெதுவான தீயில் வறுக்கவும்.
நெய் சுவைக்கேற்ப சேர்க்கலாம்; நெய்யே இனிப்பின் உயிர்.
வெல்லம் சேர்த்தால் இன்னும் ஹெல்தி.
இந்த தீபாவளிக்கு இனிப்புகள் செய்து உங்க குடும்பத்தை இனிமையாக்குங்கள். உங்க அனைவருக்கு எங்களின் டீம் சார்பாக அட்வான்ஸ் ஹாப்பி தீபாவளி.
Summary:
Here are three delicious and simple sweets made with gram flour (besan): Besan Laddu, Besan Sheera and Besan Burfi Each recipe is rich in taste, easy to prepare, and filled with traditional Indian flavor. Perfect for festivals like Diwali or any special occasion.
Make these classic sweets at home and enjoy the aroma of pure ghee and sweetness.