இந்த ஜூஸ் தினமும் குடித்தால் – தலைமுடி உதிர்வே இருக்காது!

129-1.jpg

முருங்கை – இந்திய சமையலறையில் பெரிதாக மதிக்கப்படாவிட்டாலும் , உண்மையில் இது ஒரு அதிசய சூப்பர் ஃபுட்!
முருங்கை இலைகளை ஜூஸாகவோ, பொடியாகவோ, உணவாகவோ எடுத்துக் கொண்டால், உதிர்ந்து போன தலைமுடி மீண்டும் வலிமை பெறும், அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாறும்.

‘அதிசய மரம்’ என அழைக்கப்படும் முருங்கையின் இலை, விதை, காய்களில் தலைமுடிக்கு அவசியமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் A, C, சிங்க், இரும்புச்சத்து ஆகியவை மயிர் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகின்றன.

முருங்கையின் பயன்கள்:

  • வைட்டமின் A: மயிர் கால்களுக்கு ஈரப்பதம் அளித்து, வறட்சியும் பொடுகும் தடுக்கிறது.

  • வைட்டமின் C: கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து, முடி வேர்களை வலுப்படுத்துகிறது.

  • சிங்க் மற்றும் இரும்பு: ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

முருங்கை பொடி:


உலர்ந்த முருங்கை இலைகளை பொடியாக்கி, ஒரு டீஸ்பூன் அளவு தினசரி ஸ்மூத்தி, இளநீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் தேனுடன் கலந்து பருகலாம். இது தலைமுடி உதிர்வை குறைத்து, இயற்கையான பளபளப்பை தரும்.

முருங்கை ஜூஸ்:


முருங்கை இலை, எலுமிச்சை சாறு, தண்ணீர் சேர்த்து 30–50 மில்லி அளவு காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது உடலிலுள்ள நச்சுகளை நீக்கி, முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. நெல்லிக்காய் சாறுடன் சேர்த்து குடித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

பாரம்பரிய முறைகள்:
தென்னிந்தியாவில் முருங்கை இலை, செம்பருத்தி பூ சேர்த்து தலைமுடியில் தடவுவது வழக்கம். இது தலைச்சூட்டை தணித்து, முடி வேகமாக வளர உதவுகிறது. ஆயுர்வேதத்திலும் முருங்கை மூன்று தோஷங்களையும் (வாதம், பித்தம், கபம்) சமநிலைப்படுத்தும் மருந்தாகக் கருதப்படுகிறது.

எப்படித் தேர்வு செய்வது?
நேரமில்லாதவர்கள் முருங்கை பொடியைத் தேர்வு செய்யலாம். இது நீண்டநேரம் சேமிக்கக் கூடியது. நேரமுள்ளவர்கள் முருங்கை சாறை தயாரித்து குடிக்கலாம். சிறந்த விளைவிற்காக வாரத்தில் 5 நாட்கள் முருங்கை பொடியும், 2 நாட்கள் முருங்கை ஜூஸும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும், புரதம், இரும்புச்சத்து நிறைந்த பருப்பு, கீரை, காய்கறி, நட்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிடுவது முக்கியம்.

Summary :
Moringa juice rich in vitamins A, C, zinc, and iron strengthens hair roots, reduces fall, and promotes shiny, healthy hair naturally.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *