இன்றைய வேகமான வாழ்க்கையில் மன அழுத்தம், சோர்வு, ஜீரண கோளாறு, சளி , இருமல் போன்ற பிரச்சனைகள் நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கான பக்க விளைவில்லா தீர்வு தான் ஹெர்பல் டீ.
ஹெர்பல் டீ என்பது காஃபீன் இல்லாத இயற்கை பானமாகும். இது சுவையிலும் மணத்திலும் மெருகூட்டப்பட்டு, உடலுக்கும் மனதுக்கும் அமைதியை தரும் பானமாகும்.
முக்கியமாக, இதனை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தயார் செய்யலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய 6 ஹெர்பல் டீ வகைகள் மற்றும் அவற்றின் நன்மைகள்.
1. துளசி டீ (Tulsi Tea)
தேவையான பொருட்கள்:
துளசி இலைகள் – 10
தண்ணீர் – 1 கப்
தேன் – 1 டீஸ்பூன் (விருப்பம்)
செய்முறை:
தண்ணீரில் துளசி இலைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி, சிறிது தேன் கலந்து சூடாக குடிக்கலாம்.
நன்மைகள்:
துளசி டீ சளி , இருமல், தொண்டை வலி போன்றவற்றை நீக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி, மன அமைதியை தரும்.
2. இஞ்சி டீ (Ginger Tea)
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1 ( கட்டவிரல் அளவு )
தண்ணீர் – 1 கப்
தேன் / எலுமிச்சை சாறு – விருப்பம் போல்
செய்முறை:
தண்ணீரில் இஞ்சியை இடித்து சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். வடிகட்டி, தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.
நன்மைகள்:
ஜீரணத்துக்கு உதவும், குளிர் காய்ச்சலை தணிக்கும், உடலை சூடாக வைத்திருக்கும் சிறந்த பானம்.
3. மஞ்சள் டீ (Turmeric Tea)
தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மிளகு தூள் – சிறிதளவு
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வைத்து மஞ்சள், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
நன்மைகள்:
மஞ்சள் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், உடலிலுள்ள அழற்சிகளை குறைத்து , தோல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
4. புதினா டீ (Mint Tea)
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – 8 முதல் 10
தண்ணீர் – 1 கப்
தேன் – விருப்பம் போல்
செய்முறை:
புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க விடவும்,பின்பு வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
நன்மைகள்:
புதினா டீ ஜீரண சக்தியை மேம்படுத்தி , மூச்சுத் திணறலை குறைக்கிறது, மனதை புத்துணர்வுடன் வைக்கிறது.
5. இலவங்கப்பட்டை டீ (Cinnamon Tea)
தேவையான பொருட்கள்:
இலவங்கப்பட்டை – 1 துண்டு
தண்ணீர் – 1 கப்
தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை:
தண்ணீரில் இலவங்கப்பட்டையை / பொடியை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
நன்மைகள்:
இது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும், சளி மற்றும் குளிரைத் தடுக்க உதவும்.
6. லெமன் கிராஸ் டீ (Lemongrass Tea)
தேவையான பொருட்கள்:
லெமன் கிராஸ் இலைகள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
தேன் – விருப்பப்படி
செய்முறை:
தண்ணீரில் லெமன் கிராஸை சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க விடவும். வடிகட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.
நன்மைகள்:
மன அழுத்தத்தை குறைத்து , ஜீரணத்தை மேம்படுத்தி , உடலை புத்துணர்வுடன் வைக்கும்.
ஹெர்பல் டீயின் பொது நன்மைகள்:
- உடலிலுள்ள நச்சுகளை நீக்கி, இயற்கையாக டீடாக்ஸ் செய்கிறது.
- இரத்த ஓட்டத்தை சீராக்கி, மன அமைதியை தருகிறது.
- தோல் பிரச்சனைகள் மற்றும் சோர்வை குறைக்கும்.
- ஜீரண சக்தி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை உயர்த்துகிறது.
Summary:
Learn how to make 6 refreshing herbal teas at home using simple natural ingredients. Tulsi, ginger, turmeric, mint, cinnamon, and lemongrass teas provide health benefits and soothing flavors. These teas boost immunity, aid digestion, reduce stress, and enhance overall wellness. Enjoy a cup daily for a natural, healthy, and relaxing routine