நாளைக்கு நன்றாக இருக்க இன்று உங்க சேமிப்பை தொடங்குங்கள்.

Untitled-design-59.png

நாளைக்கு பாதுகாப்பாக இருக்க இன்றைக்கு சேமிக்க ஆரம்பிங்க இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. செலவுகளும், தேவைகளும் அதிகம். ஆனா, எவ்வளவு சம்பாதித்தாலும், சேமிப்பு இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மூட்டு சந்து பாதை மாதிரி.

பணத்தைச் சேமிப்பது என்பது பெரியவர்களுக்கான வேலையில்லை . அது எந்த வயதிலும் தொடங்கக்கூடிய நல்ல பழக்கமாகும்.

சிறிய அளவில் தொடங்கினாலும், பொறுமையாக பழகினால் உங்கள் சேமிப்பு வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையையும் நிம்மதியையும் தரும்.

வாங்க பார்க்கலாம், உங்கள் வருமானத்தை சிறப்பாக பயன்படுத்த 20 எளிய Saving ஐடியாஸ் !

  1. முதலில் உங்களுக்கே பணம் கொடுங்கள் – சம்பளம் கிடைத்தவுடன் ஒரு பகுதியை சேமியுங்கள்
  2. பட்ஜெட் தயார் செய்யவும் – மாதந்தோறும் வரும் வருமானத்தில் வரவு-செலவு பட்டியலை எழுதிக்கொள்ளுங்கள்.
  3. தேவையில்லாத செலவுகளை குறைப்பது – ஷாப்பிங், ஆன்லைன் ஆர்டர் போன்றவற்றை கட்டுப்படுத்துங்கள்.
  4.  மின்சாரத்தில் சேமிக்கலாம் – தேவையில்லாத விளக்குகளை அணைத்தால் போதும் அதில் கூட பணம் சேமிக்கலாம்.
  5.  பயண செலவை கட்டுப்படுத்தவும் – பஸ் / ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.
  6. கிரெடிட் கார்டு பயன்பாட்டை கண்டிப்பாக குறைக்கவும் – தவணை வட்டி உங்களை சிக்கலுக்கு கொண்டு போக வைக்கும்.
  7. சேமிப்பு கணக்கைத் திறக்கவும் – சிறந்த வட்டி தரும் வங்கியை தேர்ந்தெடுத்து அதில் பணத்தை போட்டால் அதன் முலம் வருமானத்தை ஈட்டலாம்.
  8.  வீட்டிலேயே சமைக்கவும் – வெளியில் சாப்பிடுவது அதிக செலவு மற்றும் உடலுக்கும் கெடுதல் எனவே வீட்டில் சமைத்து சாப்பிடவும்.
  9. அவசர நிதி (Emergency Fund) தொடங்கலாம் – குறைந்தது 3 மாத செலவுக்கு பணம் வைக்கவும்.
  10. பழைய பொருட்களை மறுபயன்பாடு செய்யவும் – மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள்அதன் முலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம் .

  • புதிய கடன் வாங்காமல் – கடன் இல்லாத வாழ்க்கை மனதிற்கு நிம்மதியை தரும் வாழ்க்கை .
  • காப்பீடு வைத்திருக்கவும் – வாழ்க்கை மற்றும் சுகாதார காப்பீடு அவசியம்.
  • சேமிப்பு இலக்கு அமைக்கவும் – 6 மாதம், 1 வருடம், 5 வருடம் போன்ற தெளிவான இலக்குகள் அமைக்கவும்.
  • சிறிய வெற்றிகளை கொண்டாடுங்கள் சேமித்த ஒவ்வொரு ரூபாயும் நமக்கு முக்கியம்.
  •  ரசீதுகளை சேமியுங்கள் – ஒவ்வொரு செலவின் ரசீதை சேமித்து வந்தால் , உங்கள் செலவு பழக்கத்தை புரிந்துகொள்ளவும் எந்த செலவை குறைக்கலாம் என்ற ஐடியாவும் கிடைக்கும்.
  • ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயாவது பாட்டிலில் சேமித்து வாருங்கள் ஆண்டு இறுதியில்ஒரு நல்ல தொகை கையில் கிடைக்கும்.
  •  மார்க்கெட் ஆஃபர்கள், பண்டிகை சலுகைகள்,ஆன்லைன் தள்ளுபடி நாட்களில் மட்டுமே ஷாப்பிங் செய்யுங்கள்.
  •  தேவையில்லாத ஆப்ஸ்களை நீக்குங்கள் : ஷாப்பிங், கேமிங், சப்ஸ்கிரிப்ஷன் உள்ள ஆப்ஸ்கள் உங்க பணத்தை மெதுவாக கரைத்துவிடும்.
  • துவைக்கும் பழக்கத்தை மாற்றுங்கள் : வாஷிங் மெஷினில் துவைப்பதற்கு பதில் கையில் துவைத்தல் மின்சாரம் மற்றும் நீர் இரண்டும் சேமிக்கலாம்.
  •  சிறிய தோட்டம் வையுங்கள் – கீரை, துளசி,கத்தரி, வெண்டை ,மிளகாய்,கருவேப்பிலை போன்ற செடிகளை வீட்டிலேயே வளர்த்தால் தினசரி செலவு குறையும்.

சேமிப்பது ஒரு சுமையல்ல, அது ஒரு விதை. நாளை உங்கள் கனவுகளை நிறைவேற்ற, இது போல் சிறிது சிறிதாக சேமியுங்கள். உங்க குடும்பத்தை மேம்படுத்துங்கள்.

Summary:

This part shares 20 extra smart and realistic saving tips for everyday life. Learn how to save money through simple habits like budgeting, power saving, and mindful shopping. Small daily actions can help you reduce waste and grow your savings steadily.
Start today — secure your tomorrow with consistent, mindful financial planning.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *