மும்பை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான ரோகித் சர்மா, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் வீரர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

38 வயதிலேயே இந்த சாதனையை படைத்துள்ள ரோகித், இந்தியர்களில் சச்சின், தோனி, கோலி, கில்லுக்கு பிறகு இந்த இடத்தைப் பிடித்த 5வது வீரராக உயர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா மொத்தம் 202 ரன்கள் (1 சதம், 1 அரைசதம்) எடுத்தார். இதனால் அவரது புள்ளிகள் 781 ஆக உயர்ந்தன. இதன் மூலம் முதலிடத்தில் இருந்த சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி ரோகித் முதலிடத்தைப் பிடித்தார்.
இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஷாட்ரான் (764) உள்ளார். கில் தற்போது 745 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 276 ஆட்டங்களில் விளையாடிய ரோகித் சர்மா, 11,370 ரன்கள், 33 சதங்கள், 59 அரைசதங்கள் என பிரமாண்ட சாதனைகளைப் பெற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்கா தொடர் (நவம்பர் 30) அவருக்கு அடுத்த சவாலாக இருக்கிறது.
Summary :
Rohit Sharma ranks No.1 in ICC ODI list at age 38, overtaking Shubman Gill after scoring 202 runs against Australia in recent series.








