வைகோவின் பாராட்டு: பைசன் படத்தால் மெய்சிலிர்ந்தார் மாரி செல்வராஜுக்கு நேரில் போன்!

151.jpg

பைசன் திரைப்படம் வெளியானதிலிருந்து அரசியல் வட்டாரங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, Naam Tamilar தலைவன் சீமான் உள்ளிட்ட பலர் இப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு அதன் இயக்குனர் மாரி செல்வராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடி பாராட்டியுள்ளார்.

இந்த தகவலை மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கிய புதிய படம் ‘பைசன்’, தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர், லால், மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பா.ரஞ்சித் தயாரித்துள்ள இப்படம், அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் விமர்சகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary :
Vaiko called director Mari Selvaraj to praise Bison, the Dhruv Vikram film based on kabaddi star Manathi Ganesan, gaining cross-party acclaim.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *