அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் சி ஜின்பிங் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வரலாற்றுச் சந்திப்பு அக்டோபர் 30 அன்று தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் போது நடைபெறவுள்ளது.
இரு நாடுகளும் பல மாதங்களாக இந்த சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. எனினும், சமீபத்தில் ஏற்பட்ட வர்த்தகப் போர், மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசியல் தகராறுகள் காரணமாக, இந்த சந்திப்பு ரத்து செய்யப்படும் என்ற அச்சமும் நிலவியது.
இம்மாத தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி சீனா அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதற்கு பதிலாக, அமெரிக்கா நவம்பர் முதல் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 100% வரி உயர்வு விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த சூழலில் நடைபெறவிருக்கும் டிரம்ப்–ஜின்பிங் சந்திப்பு, உலக பொருளாதாரத்துக்கும், இரு நாடுகளின் உறவுகளுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது.
இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் தங்கள் கோணத்தில் சமரசம் செய்ய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்களா, அல்லது பதற்றம் மேலும் உயரும் நிலையா என்பது அனைவரும் கவனித்து வரும் முக்கியக் கேள்வியாகும்.
Summary :
Trump and Xi to hold crucial talks at APEC summit in South Korea as trade war deepens with new Chinese export bans and US tariff hikes.








