You are currently viewing வசூலில் மாபெரும் சாதனை படைத்த “புஷ்பா 2” – OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வசூலில் மாபெரும் சாதனை படைத்த “புஷ்பா 2” – OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
0

“புஷ்பா 2” – ப்ளாக்பஸ்டர் வெற்றி

அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகி 2021 ஆம் ஆண்டு வெளியான “புஷ்பா: தி ரைஸ்”, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, “புஷ்பா 2: தி ரூல்” வெளியானது.

பாகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், வசூலில் டபுள் மடங்கு லாபம் ஈட்டி, பல சாதனைகளை பதிவு செய்தது.

OTT ரிலீஸ் தேதி!

டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, “புஷ்பா 2” எப்போது OTT-யில் வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

அதன்படி, பிரபல OTT தளமான நெட்ஃபிளிக்ஸில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “புஷ்பா 2” ஜனவரி 30ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் இனி OTT-யில் “புஷ்பா 2” மாஸாக அனுபவிக்கலாம்!

Leave a Reply