You are currently viewing அடுத்த மாதம் மாஸ் காட்டவுள்ள “விடாமுயற்சி” – ப்ரீ புக்கிங் விவரம் வெளியானது!

அடுத்த மாதம் மாஸ் காட்டவுள்ள “விடாமுயற்சி” – ப்ரீ புக்கிங் விவரம் வெளியானது!

0
0

“விடாமுயற்சி” – ரசிகர்களை கட்டிப்போடும் எதிர்பார்ப்பு!

நடிகர் அஜித் முக்கியமான ரிஸ்க்குகள் எடுத்துத் நடித்துள்ள “விடாமுயற்சி”, அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அஜித்தின் ஸ்டண்ட் சீன்கள் ரசிகர்களை பரபரப்பாகக் வைத்துள்ளன. படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து வீடியோவாக லீக் ஆனதும், ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

“விடாமுயற்சி” திரையில் வருவது ஒரு திருவிழா போல இருக்கும்” என அஜித் சொன்னதாக இயக்குநர் மகிழ் திருமேனி குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 6 ஆம் தேதி படம் மொத்தமாக வெளியாக உள்ளது!

ப்ரீ புக்கிங் அப்டேட் – மாஸாக நடைபெறும் முன்பதிவு!

நடிகர் அஜித்தின் “துணிவு” படத்திற்குப் பிறகு, பெரிய திரையில் அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால், “விடாமுயற்சி” ப்ரீ புக்கிங் துவங்கியதும் வரலாறு காணாத வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • தமிழகத்தில் 90% திரையரங்குகளில் படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
  • ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இப்படம், 800-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்க, வெளிநாடுகளில் (ஓவர்சீஸ்) ப்ரீ புக்கிங் வசூல் ரூ.30 லட்சத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் திரையரங்கில் மாஸாக அனுபவிக்க தயாராகுங்கள்.

Leave a Reply