மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில தென் மாவட்ட ரயில்கள் நவம்பர் மாதத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

நாகர்கோவில் – கோவை (எண்:16321) மற்றும் கோவை – நாகர்கோவில் (எண்:16322) ரயில்கள் நவம்பர் 1, 6, 8, 11, 13, 15 தேதிகளில் வழக்கமான பாதைக்கு பதிலாக
விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி – கரூர் வழியாக இயக்கப்படும்.
இவை அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் பெறும்.
மயிலாடுதுறை – செங்கோட்டை (எண்:16847) ரயில் நவம்பர் 1, 8, 11, 15 தேதிகளில்
திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
நாகர்கோவில் – கச்சிக்குடா (எண்:16354) ரயில் நவம்பர் 1, 8, 15 தேதிகளில்,
நாகர்கோவில் – மும்பை சிஎஸ்டி (எண்:16340) ரயில் நவம்பர் 11 அன்று
அதே மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
ஓகா – ராமேஸ்வரம் (எண்:16734) ரயில் நவம்பர் 4 மற்றும் 11 தேதிகளில்
கரூர் – திருச்சி – மானாமதுரை வழியாக இயங்கும்.
மதுரை – பிகானூர் அனுவ்ரத் (எண்:22631) (நவ.6, 13),
குருவாயூர் – எழும்பூர் (எண்:16128) (நவ.10),
பனாரஸ் – கன்னியாகுமரி தமிழ் சங்கமம் (எண்:16368) (நவ.9) ஆகிய ரயில்களும்
விருதுநகர் – மானாமதுரை – காரைக்குடி – திருச்சி வழியாக இயக்கப்படும்.
மேலும், மதுரை – எழும்பூர் தேஜஸ் ரயில் (எண்:22672) நவம்பர் 1, 8, 11, 15 தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக, மாலை 3.30 மணிக்கு பதிலாக 4.15 மணிக்கு புறப்படும்.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
“பயணிகள் மாற்றங்களை கவனித்து, தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே அமைக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளது.
Summary :
Southern Railway diverts key south-bound trains via alternate routes and delays Tejas Express by 45 minutes on select November dates.








