கேரளா பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல்: ரூ.12 கோடியை தட்டி செல்லப் போவது யார்?

0101.jpg

திருவனந்தபுரம்:
கேரளா அரசு நடத்தும் லாட்டரிகளில் ஒன்றான பூஜா பம்பர் லாட்டரி தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகிறது. ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி பெயிண்ட் கடை தொழிலாளியின் வெற்றி கதைக்கு பிறகு, இப்போது எல்லோரின் கவனமும் பூஜா பம்பர் டிக்கெட்டில் குவிந்துள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி, இரண்டாவது பரிசு ரூ.1 கோடி (5 டிக்கெட்டுகளுக்கு) மற்றும் மூன்றாவது பரிசு ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு) என பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் வரும் நவம்பர் 22 ஆம் தேதி பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த முறை மொத்தம் 5 சீரிஸ்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கேரளாவில் வருடம் முழுவதும் ஆறு முக்கிய பம்பர் லாட்டரிகள் நடத்தப்படுகின்றன —
கிறிஸ்துமஸ்–நியூ இயர், சம்மர், விஷு, மான்சூன், ஓணம், பூஜா பம்பர் என. ஒவ்வொன்றுக்கும் கோடிக் கணக்கில் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

தற்போது பாலக்காடு மாவட்டத்தில் அதிக அளவில் பூஜா பம்பர் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. அடுத்து திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் நகரங்களிலும் டிக்கெட் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது என லாட்டரி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அதிர்ஷ்டம் சோதிக்க டிக்கெட்டுகள் வாங்கும் நிலை காணப்படுகிறது.
“இந்த முறை அதிர்ஷ்டம் எவரை தேடி வருகிறது?” என்ற எதிர்பார்ப்பில், முழுக் கேரளாவும் லாட்டரி வெறியில் மூழ்கியுள்ளது.

Summary :
Kerala Pooja Bumper Lottery draw on Nov 22; first prize ₹12 crore. Palakkad tops in sales, followed by Thrissur and Thiruvananthapuram.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *