செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் முன்னிலை வகிக்க உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான Microsoft, Meta, Amazon, Alphabet (Google) ஆகியவை மொத்தம் 380 பில்லியன் டொலர் முதலீடு செய்ய தீர்மானித்துள்ளன.

இந்த முதலீடுகள், AI சேவைகளுக்கான பெரும் தேவையைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக செலவிடப்படவுள்ளன.
Amazon:
அமேசான் நிறுவனத்தின் நிதி அதிகாரி ப்ரையன் ஒல்சாவ்ஸ்கி, AI துறையில் “மிகப்பெரிய வாய்ப்பு” இருப்பதாக கூறி, இந்த ஆண்டில் 125 பில்லியன் டொலர் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கப்படும் என்றும் CEO ஆண்டி ஜாச்சி கூறியுள்ளார்.
Alphabet (Google):
கூகுள் CEO சுந்தர் பிச்சை, 2025-ஆம் ஆண்டில் capex செலவை 91–93 பில்லியன் டொலர் வரை உயர்த்தியுள்ளார். CFO அனாட் அஷ்கெனாஸி, 2026-ல் மேலும் அதிக முதலீடு செய்யப்படும் என கூறியுள்ளார்.
Meta:
மார்க் சக்கர்பெர்க் தலைமையில், Facebook, Instagram, WhatsApp போன்ற தளங்களில் AI ஒருங்கிணைக்கப்படுகிறது. 2025 capex செலவு 70–72 பில்லியன் டொலர், 2026-ல் இதைவிட வேகமான வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Microsoft:
முதல் காலாண்டில் 35 பில்லியன் டொலர் முதலீடு செய்த Microsoft, 2026-ல் capex 94 பில்லியன் டொலராக உயரும் என CFO ஏமி ஹூட் தெரிவித்துள்ளார்.
Morgan Stanley கணிப்பின் படி, 2028-க்குள் உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் 3 டிரில்லியன் டொலர் வரை டேட்டா சென்டர் முதலீடு செய்யலாம்.
ஆனால் சில நிபுணர்கள், AI-யின் உண்மையான விளைவுகள் பற்றிய தெளிவின்மை காரணமாக, இது “AI பபுள்” ஆக மாறக்கூடும் என எச்சரிக்கின்றனர்.








