மழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்

161.jpg

தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 4) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மியான்மர்–பங்களாதேஷ் கடற்கரை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (நவம்பர் 4) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை (நவம்பர் 5) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4°C உயர்ந்திருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32°C மற்றும் குறைந்தபட்சம் 26-27°C இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35–55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Summary :
IMD warns of heavy rain in 7 Tamil Nadu districts tomorrow, including delta and coastal areas. Fishermen advised to avoid deep sea.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *