பெண்களின் பிரசவ வலி குறித்து அதிகம் பேசப்படுகிறதாலும், அதற்கு முன் — குறிப்பாக கர்ப்பத்தின் மூன்றாவது Trimester (27ஆவது வாரம் முதல்) — ஏற்படும் வலிகள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு பெண் திடீரென தாயாகும் நிலையில், உடல் மற்றும் மன ரீதியாக பெரிய மாற்றங்களை அனுபவிக்கிறார். ஹார்மோன் மாற்றங்கள், இடுப்பு மூட்டுக்கள் நெகிழ்வது, குழந்தையின் எடை காரணமாக வயிறு முன்னோக்கி இழுக்கப்படுதல், முதுகெலும்பு அழுத்தம் போன்றவை எல்லாம் சேர்ந்து பல்வேறு வகை வலிகளை ஏற்படுத்துகின்றன.
சிலர் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து வலியை தணிக்க முயற்சிக்கிறார்கள்; ஆனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமோ எனப் பயந்து பலர் அதையும் தவிர்க்கிறார்கள். இதற்கு மாற்றாக மசாஜ், பிசியோதெரபி, சூடு அல்லது குளிர் ஒத்தடம், chiropractic போன்ற சிகிச்சைகள் உதவக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பணியாற்றும் பெண்களுக்கு இது இன்னும் கடினம் — வலி காரணமாக விடுப்பு எடுத்தால், பிரசவத்துக்குப் பிந்தைய விடுப்பு குறையுமோ என்ற கவலை. மேலும் வீட்டில் ஓய்வெடுக்கும்போதும் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
அமெரிக்க ஆய்வாளர் ஜூலி விக்னாட்டோ (Julie Vignato) கூறுவதாவது:
“வலி குறித்து நீங்கள் கூறும் போது யாரும் கவனிக்கவில்லை என்றால் மற்றொருவரிடம் சொல்லுங்கள். மருத்துவர் முக்கியத்துவம் தரவில்லை என்றால் வேறு மருத்துவரை அணுகுங்கள். கர்ப்ப கால வலி சாதாரணம் என புறக்கணிக்கக் கூடாது.”
கர்ப்ப கால வலிக்கு சரியான சிகிச்சை அளிப்பது, பெண்களின் உடல் மற்றும் மன நலத்திற்கும் மிகவும் அவசியம். “ஒரு பெண் மகிழ்ச்சியாக இருந்தால், அந்த வீடும் ஆரோக்கியமாக இருக்கும்” என விக்னாட்டோ கூறுகிறார்.
Summary :
Medical researcher Julie Vignato highlights the need to address third-trimester pregnancy pain, warning that neglecting it harms both body and mind.









