நாமக்கல்: விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், பலர் தங்கள் விவசாய அடையாள எண் பதிவு செய்யாததால் உதவித் தொகை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய அரசு 2019 முதல் சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளுக்கு வருடாந்திர ரூ.6,000 நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. தற்போது 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர்.
ஆனால், அடையாள எண் பதிவு செய்யாததால் பல லட்சம் விவசாயிகளுக்கு தொகை கிடைக்காமல் உள்ளது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விவசாய அடையாள எண் கட்டாயம்
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற, தனித்துவமான விவசாய அடையாள எண் அவசியம் என கூறப்பட்டுள்ளது. அந்த எண் இல்லாதவர்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படாது.
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை அல்லது தோட்டக்கலை அலுவலகம், அல்லது அருகிலுள்ள பொதுசேவை மையம் (CSC) மூலமாக பதிவு செய்யலாம். இதற்காக ஆதார் எண், சிட்டா, மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு செல்ல வேண்டும்.
நாமக்கல் மாவட்ட நிலைமை
தற்போது நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 13,416 விவசாயிகள் இன்னும் தனித்துவ விவசாய அடையாள எண் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் ரூ.6,000 நிதி உதவி தொடர்ந்து பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து பயன்பெறுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Summary :
Farmers missing their unique ID won’t get the ₹6,000 PM Kisan aid. Officials urge immediate registration to continue receiving benefits.







