ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – விளக்கம் வெளியிட்ட ஆளுநர் மாளிகை

179.jpg

தமிழக ஆளுநர் மீது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில், அக்டோபர் மாதம் வரை தமிழக சட்டப்பேரவையிலிருந்து பெறப்பட்ட மொத்த மசோதாக்களில் 81 சதவீத மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 13 சதவீத மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாக்களை தாமதப்படுத்தி, தமிழக மக்களின் நலனுக்கு எதிராக நடந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை எனவும், அவை எந்த ஆதாரத்தாலும் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆளும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் இது முதல் முறையாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக விளக்கம் வெளியிட்டுள்ளது.

Summary :
Raj Bhavan clarifies Tamil Nadu Governor approved 81% of bills and sent 13% to the President, calling delay allegations baseless and false.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *