திருச்சியிலிருந்து மதுரை வரை வைகோ நடைபயணம்: போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் ஜனவரி 2ல் தொடக்கம்

0202.jpg

போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மருமலக்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலிருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும் முயற்சிக்கு எதிராக நவம்பர் 11ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மதிமுக கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்,” என்றார்.

அத்துடன், “தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்குகிறோம். மணப்பாறை, திண்டுக்கல் வழியாக ஜனவரி 12ஆம் தேதி மதுரையை அடைந்து பயணத்தை நிறைவு செய்வோம்,” எனவும் வைகோ தெரிவித்தார்.

இந்த நடைபயணத்தின் மூலம், மாநிலம் முழுவதும் இளைஞர்களிடையே போதைப்பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதே முக்கிய நோக்கமாகும்.

Summary :
MDMK leader Vaiko to start a 10-day anti-drug awareness march from Trichy to Madurai on Jan 2, aiming to fight drug abuse across Tamil Nadu.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *