விஜய் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்தாரா? – கடுமையாக பேசிய ஆதவ் அர்ஜுனா

0175.jpg

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் மற்றும் பல நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தலைமை நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுகவையும் அதன் பிரசாரங்களையும் கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறியதாவது:
“சூழ்ச்சி என்றால் என்னவென்று கூட அறியாத கட்சி நாங்கள். திமுக பேசி வளர்ந்த கட்சி, இன்று பொய்களை மட்டுமே பரப்பி வருகிறது. திமுகவின் இந்த பொய்ப் பிரசாரங்களுக்கு தலைவர் விஜய் அமைதியால் பதிலளித்து மௌனப் புரட்சியை செய்து வருகிறார். 2026இல் அவர் இந்த சூழ்ச்சிகளை முறியடிப்பார்.

பொதுச்செயலாளர் ஓடி விட்டார், நிர்மல் குமார் ஓடி விட்டார் என்கிறார்கள். ஆனால், கலைஞர் கைது செய்யப்பட்டபோது அவரது மகன் ஓடியதை மறக்க முடியுமா? வரலாற்றை நாங்கள் பேசட்டுமா?

நானே 10 வருடங்கள் திமுகவிற்காக வேலை செய்ததற்கு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்.

2021 தேர்தலில், தலைவர் விஜய் கருப்பு–சிவப்பு சைக்கிளில் சென்று திமுகவிற்கு ஆதரவு அளித்தார். அதற்கு நன்றி இல்லையா? தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள், முதலில் அவரின் வீட்டிற்கு சென்று பாருங்கள்; அப்போது தமிழக இளைஞர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து நிற்பார்கள்.

இந்தக் குடும்பம் மட்டுமே 100 ஆண்டுகள் ஆள வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். பெரிய நடிகர்கள் அனைவரும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துவிட்டார்கள். ஆனால், தலைவர் விஜய் விரும்பியிருந்தால் அதே வழியில் 500 கோடி ரூபாய் சம்பாதித்திருக்க முடியும். மாற்றம் பேசின நடிகர்களே இன்று ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்திட்டு இணைந்துவிட்டனர்,” என்று ஆதவ் அர்ஜுனா கடுமையாக கூறினார்.

Summary :
TVK leader Aadhav Arjuna blasts DMK, questioning its gratitude for Vijay’s 2021 election support and condemning false propaganda by the party.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *