சர்தார் 2 படப்பிடிப்பு மைசூருவில் நடைபெறுவதில், சண்டைக்காட்சி படமாக்கும் போது நடிகர் கார்த்தி காயம் அடைந்ததால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
காயமடைந்த கார்த்தி – படப்பிடிப்பு தடை!
2022ஆம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான “சர்தார்”, மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது, இதில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில், படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. சண்டைக்காட்சி படமாக்கும் போது, நடிகர் கார்த்தி காலில் காயம் அடைந்துள்ளார். வலி குறையாததால், படக்குழு படப்பிடிப்பை நிறுத்தி, சென்னை திரும்பியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு மீண்டும் எப்போது?
மைசூருவில் இன்னும் 4 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது. அந்த காட்சிகளை பின்னர் வேறு ஒரு நாளில் படமாக்கும் திட்டம் தீடுபடுத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் நடிகர் கார்த்தி விரைவில் குணமடைந்து, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கின்றனர்.