காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகிய இந்த நிலநடுக்கம் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுவதற்கும், மக்கள் உயிரிழப்பிற்கும் காரணமாகியுள்ளது.

மசார்-இ-ஷெரிஃப் நகருக்கு அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், தரையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நகரில் சுமார் 5.23 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பேரிடர் சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
பெரிய புவித்தட்டு எல்லைகளில் அமைந்துள்ளதால், ஆப்கானிஸ்தான் நாடு அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட அதேபோன்ற நிலநடுக்கம் சுமார் 1,000 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary :
A 6.3 magnitude earthquake jolts Afghanistan near Mazar-i-Sharif, killing 4 and injuring 60+. Rescue teams rush to affected areas.








