பா. விஜய் இயக்கத்தில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன் ஆகியோர் நடித்த அகத்தியா திரைப்படம், பேண்டஸி மற்றும் ஹாரர் கலந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. தமிழ்சினிமாவில் அமானுஷ்ய கதைகளுக்கு குறைவில்லை, ஆனால் அகத்தியா ரசிகர்களை பிரமிக்க வைத்ததா? தோல்வியுற்றதா?
கதைசுருக்கம்
பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் படப்பிடிப்புக்காக செட் அமைக்க வரும் ஜீவா அங்கு நடைபெறும் விசித்திரமான சம்பவங்களை சந்திக்கிறார். ராஷி கண்ணா அவருக்கு ஸ்கேரி ஹவுஸ் நடத்தும் ஐடியா கொடுக்க, மக்களிடையே அது பிரபலமடைகிறது. ஆனால், கவுன்சிலரின் மகன் காணாமல் போகும் சம்பவத்தால் ஸ்கேரி ஹவுஸ் மூடப்படுகிறது.
இதன் பின்னணியில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்க, ஜீவாவிற்கு ஒரு பழைய ரீல் கிடைக்கிறது. அதில் அர்ஜூன் சித்த மருத்துவராக வருகிறார். கதை 1940களுக்கு சென்று அங்கு அர்ஜூன் யார்?, அவர் என்ன செய்கிறார்?, அவருக்கும் அந்த அரண்மனைக்கும் உள்ள தொடர்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக திரைக்கதை நகர்கிறது.
அர்ஜூனின் கலக்கம் மிக்க நடிப்பு
படம் ஆரம்பத்தில் ஜீவாவின் கதையாக தோன்றினாலும், கதை நகர நகர அர்ஜூன் கதையாக மாறிவிடுகிறது.
“சித்தார்த்தன்” எனும் கதாபாத்திரத்தில் அர்ஜூன், தமிழ் மரபையும், நாட்டுப்பற்றையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.
ஜாக்லின் கதாபாத்திரத்துடனான காதல் கெமிஸ்ட்ரி குறைவாக வேலை செய்தாலும், அர்ஜூனின் நடிப்பு படம் முழுக்க பாராட்டிற்குரியது.
பா. விஜயின் இயக்கம் – வரலாறு & தமிழ் மரபு இணைப்பு
1940களின் கதையை வரலாற்று கோணத்தில் பின்னிப் போட்டு எடுத்திருப்பது சிறப்பு.
“பாரதிதாசன், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன்” போன்ற உண்மையான வரலாற்றுச் செய்திகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
சித்த மருத்துவத்தின் பெருமையை உலகுக்கு காட்ட முயன்றிருக்கிறார், அது பாராட்டத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா – எதிர்பார்ப்புக்கு குறைவு
என் இனிய பொன் நிலாவே பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் சராசரி.
பின்னணி இசையில் சில இடங்களில் மெருகேற்றம் இருந்தாலும், பழைய யுவன் மாயமாகி விட்டார் என்றே தோன்றுகிறது.
நடிகர்கள் – பலம் & பலவீனம்
ராதாரவி பேயாக அசத்துகிறார்.
யோகி பாபு, விடிவி கணேஷ் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு காமெடி தரவில்லை.
ஜீவா ஒரு கட்டத்தில் கதை என்னோடு விளையாடுகிறதா? என குழம்புகிறார். அதே நிலைபாடு பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.
ராஷி கண்ணா, கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு இல்லை.
கடைசி 20 நிமிடங்கள் – மார்வெல் ரேஞ்சுக்கு மிரட்டல்!
படம் முழுவதும் ஒரே ரீதியான பேண்டஸி-ஹாரர் கலவையாக இருந்தாலும், கடைசி 20 நிமிடங்கள் நேர்மறையான ஆச்சரியம்.
VFX பிரமாதமாக இருந்ததால், இந்த தரம் முழுக்க இருந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தீர்ப்பு
அர்ஜூனின் நடிப்பு, வரலாற்று கோணத்தில் கதையமைப்பு, கடைசி 20 நிமிடங்கள் சிறப்பு.
படம் முழுவதும் ஒரேநிலைபாடு இல்லை, பாடல்கள் சிறப்பாக இல்லாமல் போனது, யுவன் இசையில் பளபளப்பு குறைவாக இருந்தது.
ஹாரர்-பேண்டஸி ரசிகர்களுக்கே உகந்த, ஆனால் கதையமைப்பில் இன்னும் கூர்மையான முயற்சி தேவைப்பட்ட படம் – அகத்தியா.