You are currently viewing AIADMK BJP alliance 2026 – தமிழக அரசியல் திருப்பம்!

AIADMK BJP alliance 2026 – தமிழக அரசியல் திருப்பம்!

0
0

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! AIADMK BJP alliance 2026 

“தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 2026-ஐ குறிவைத்து அரசியல் கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் கூட்டணி கணக்குகளில் மூழ்கி உள்ளன.

மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக, எப்படியாவது தமிழகத்தில் ஒரு பெரிய கூட்டணியை அமைத்து வெற்றி வாகை சூட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, அதிமுகவை தங்கள் பக்கம் இழுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து இன்னும் தெளிவான பதில் வரவில்லை.

இதற்கிடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித்ஷா நேற்று சென்னைக்கு வருகை தந்தார். அவர் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை இறுதி செய்வதற்கும், தமிழ்நாடு பாஜக தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை வந்ததாகத் தகவல் வெளியானது.

இதன் பிறகு, இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.

இதன் பிறகு எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமித்ஷா, ‘2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்.

2026 தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் இருக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இந்தக் கூட்டணி இருக்கும்’ என்று தெரிவித்தார்.

கூட்டணியின் எதிர்காலம்:

இந்த கூட்டணி அறிவிப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலை மட்டுமல்லாமல், எதிர்கால தமிழக அரசியலையும் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக அரசியலில் பாஜகவின் செல்வாக்கு அதிகரிக்கும்.

மேலும், திராவிட கட்சிகளின் கோட்டையாக இருந்த தமிழகத்தில், தேசிய கட்சியான பாஜக வலுவான இடத்தைப் பிடிக்கும்.

இந்த கூட்டணியின் வெற்றி தோல்வி, தமிழக அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary:

The Bharatiya Janata Party (BJP) and All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) have officially announced their alliance for the 2026 Tamil Nadu state legislative assembly elections. Union Home Minister Amit Shah confirmed the alliance, stating that it will be a coalition government led by AIADMK General Secretary Edappadi K. Palaniswami.

Leave a Reply