You are currently viewing Rain Disruption-சென்னை விமான நிலையத்தில் அவதி!

Rain Disruption-சென்னை விமான நிலையத்தில் அவதி!

0
0

வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு – Rain Disruption

சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று காலை சுமார் 10 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.-Rain Disruption

இதன் காரணமாக, நிலவி வந்த கோடை வெப்பத்தின் தாக்கம் குறைந்து, எங்கும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

இருப்பினும், இந்த கனமழையின் விளைவாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக,

1.மும்பையிலிருந்து 145 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர் இந்தியா விமானம்,

2.ஹைதராபாத்திலிருந்து 160 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம்,

3.கவுகாத்தியிலிருந்து 138 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம்,

4.பெங்களூருவிலிருந்து 125 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானம்

உட்பட மொத்தம் ஐந்து விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டன.

கடுமையான வானிலை சீரான பின்பு, இந்த விமானங்கள் அனைத்தும் தாமதமாகத் தரையிறங்கின.

மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து தரையிறங்கவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோன்று, டெல்லி, மும்பை, கொச்சி, கோவை மற்றும் தோஹா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. திடீரென பெய்த கனமழையின் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

Summary:

Heavy and sudden downpour accompanied by strong winds in Chennai caused significant Rain disruption to flight operations at Chennai International Airport.

Several incoming flights were forced to circle for extended periods, with one flight from Mumbai being diverted to Bengaluru. Over ten departing flights, including those to Delhi, Mumbai, Kochi, and Doha, also faced delays, causing inconvenience to passengers.

Leave a Reply