அப்பாவைப் போல் மகன்: ரேஸ் களத்தில் ஆத்விக்!

Aadvik Ajith Kart Racing

10 வயதில் கார் ரேஸரா? அஜித் மகன் ஆத்விக்கின் அதிரடி என்ட்ரி!

நடிகர் அஜித் குமார், சென்னையில் உள்ள மெட்ராஸ் கார்டிங் ரேஸிங் தளத்தில் தனது 10 வயது மகன் ஆத்விக்கிற்கு கார் பந்தய பயிற்சி அளித்தார்.இந்த பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வீடியோவில், அஜித் ஆர்வத்துடன் ஆத்விக்கிற்கு பந்தய நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பது பதிவாகியுள்ளது.
இதைப் பார்த்த ரசிகர்கள், ஆத்விக்கின் ஆர்வத்தையும், தந்தையின் வழிகாட்டுதலையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“அப்பாவைப் போலவே மகன்” என்று பலரும் ஆத்விக்கிற்கு வாழ்த்து தெரிவித்து, அவர் ஒரு சிறந்த பந்தய வீரராக வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

துபாய் 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்த அஜித் அணி, இத்தாலியிலும் அதே வெற்றியைப் பெற்றது. பந்தயப் பணிகளை முடித்து சென்னை திரும்பிய அஜித், மகனுடன் ஜாலியாக கார் ரேஸிங் செய்து நேரத்தை செலவிட்டார்.

ரொனால்டினோவுடன் ஆத்விக் பேசியது வைரலான நிலையில், தற்போது 10 வயதில் தந்தையைப் போல் ரேஸிங்கில் களமிறங்குகிறார். அஜித் குமார் சென்னை கார்டிங் தளத்தில் பயிற்சி அளிப்பது ரசிகர்களின் பாராட்டைப் பெறுகிறது.

Summary:  Actor Ajith Kumar is training his 10-year-old son, Aadvik, in go-kart racing at the Madras Karting Race track in Chennai. The training video has gone viral, with fans praising Aadvik’s enthusiasm and Ajith’s guidance. This comes after Ajith’s racing team’s success in Dubai and Italy.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *