குட் பேட் அக்லி படத்தில் விஜய் டைலாக்கை பேசிய அஜித்! என்ன தெரியுமா?
அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் ‘விடாமுயற்சி’க்குப் பிறகு வெளியாகிறது.அஜித் ‘AK’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார், நாளை ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தில் விஜய் வசனத்தை அஜித் பேசியதாக இணையத்தில் தகவல்
இந்த செய்தி எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விஜய் சினிமாவில் தீவிரமாக இருந்தவர், தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தனது அரசியல் கட்சியான தவெக கூட்டத்தில், அவர் சில அரசியல் கட்சிகளை கிண்டல் செய்யும் விதமாக “What bro, it’s very wrong bro” என்ற வசனத்தை பயன்படுத்தியிருந்தார்.
தற்போது, அஜித் குமார் தனது வரவிருக்கும் திரைப்படமான ‘குட் பேட் அக்லி’யில் இந்த வசனத்தை பேசியிருக்கலாம் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் சமீப காலமாக பெரிய வெற்றிப் படங்கள் கொடுக்கவில்லை. ‘பில்லா’, ‘மங்காத்தா’ மட்டுமே விதிவிலக்கு.
ஒவ்வொரு முறையும் ஏமாற்றினாலும், ரசிகர் அஜித் படம் என்பதால் ‘குட் பேட் அக்லி’ மீது அதிக நம்பிக்கை.
அஜித் உடல் எடை குறைத்து உழைத்திருப்பதால் படத்தின் தரம் நன்றாக இருக்கும் என நம்புகின்றனர்.
Summary:
Rumors are circulating online that Ajith Kumar might have used Vijay’s popular dialogue, “What bro, it’s very wrong bro,” from a recent political event in his upcoming movie “Good Bad Ugly.” This news has increased anticipation for the film, which is Ajith’s next release after “Vidaa Muyarchi.” While official confirmation is awaited, fans are hopeful for a strong film from Ajith, who has reportedly worked hard on it.